சளி, காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!



How to Control Cough Fever Naturally

பருவம் தவறி நிகழும் எந்தவொரு விஷயத்திற்கும் தக்க எதிர்வினை உண்டு என்பதை இயற்கையே நமக்கு மெய்படுத்தி காண்பிக்கிறது. பருவங்கள் தவறி நிகழும் மழை, குளிர், கோடையால் ஏற்படும் பிரச்சனையால் அவதிப்பட தொடங்கியுள்ளோம்.

பருவமாற்றம் காரணமாக சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற பல பிரச்சனையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிப்பட தொடங்கியுள்ளனர். இவர்கள் இயற்கையான வழியில் நோயெதிர்ப்பு சக்தியை பெற பல வழிகள் இருக்கின்றன. 

நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவுப்பொருட்கள் வாயிலாகவும் பலனை காணலாம். 

அதிக சளி மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு ஆடா தொடை கஷாயம் செய்து கொடுக்கலாம். 4 ஆடா தொடை இலைகள், 10 துளசி இலைகள், 4 கற்பூரவள்ளி இலைகளை நீரில் சேர்த்து கொதிக்கவிட்டு குடிப்பது நல்லது. 

Cough

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடித்து, அதனோடு ஆடா தொடை கஷாயத்தையும் சேர்த்து குடிக்கலாம். இதனால் சளி, சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். தொண்டையில் தொற்று, தொண்டை வலி ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு 3 பூண்டு பற்களை நசுக்கி கொடுக்கலாம். 

தூதுவளையை அவ்வப்போது கீரை வகையில் சமைத்து சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் காய்ச்சல் போன்றவை எப்போதும் நெருங்காது. உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்.. உடல் நலன்பெறும். 

இயற்கை மருந்துகள் சிலருக்கு உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத வகையில் இருக்கும். அவ்வாறானவர்கள் மருத்துவரை நாடுவது சாலச்சிறந்தது.