#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே.. அசத்தல் டிப்ஸ்.. கோவத்தில் இருக்கும் மனைவியை எப்படி சமாளிப்பது?.. ஆண்களே தெரிஞ்சிக்கோங்க..!
கணவன் - மனைவிக்குள் அவ்வப்போது சண்டைகள் ஏற்படுவது இயல்பே. இருவரும் எதற்காக ? எதனால் ? சண்டையிடுகின்றனர். எப்படி சமாளிக்கின்றனர்? என்பதில் தான் விஷயமே இருக்கிறது. கணவன் - மனைவிக்குள் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மையுடன் இருக்கலாம். மனைவி கோபமாக இருக்கும் சமயத்தில் கணவர் அவரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இன்று காணலாம்.
எப்போதும் உங்களின் இல்லத்து அரசியை/ராணியை பார்க்கும் போது சிரிக்க மறக்க வேண்டும். அந்த சிரிப்பு என்ற புன்னகை அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். ஆர்வக்கோளாறின் வெளிப்பாடாக இருந்தால் கோவம் கூட வாய்ப்புள்ளது. மனைவியின் சிறு தவறுகளை குறிப்பிட்டு வாய் இருக்கிறது என கண்டதையும் பேச கூடாது. இதனை இப்படி எளிமையாக செய்யலாம் என எடுத்துரைக்க வேண்டும்.
மனைவியின் முக்கியமான வேலை நேரங்களில் அன்பாக பேச வேண்டுமே தவிர்த்து, தொந்தரவாக இருக்க கூடாது. இதனால் மனைவியின் கோபம் அதிகமாகி திட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலைக்கு சென்று வரும் மனைவியாக இருப்பின், அவரின் அன்றைய பொழுது அல்லது சுவாரசியமாக நடந்த நிகழ்வு குறித்து கேட்டறிந்து பேசி மகிழுங்கள். உங்களின் சுவாரசிய அனுபவத்தையும் மறந்துவிடாதீர்கள்.
மனைவி செய்யும் உதவிக்கு அன்பார்ந்த நன்றி கூறுதல், சின்ன சின்ன கொஞ்சல் மற்றும் அணைப்பது, தவறு செய்தால் தாமதமின்றி முன்வந்து மன்னிப்பு கேட்பது போன்றவை மனைவியின் கோபத்தை குறைக்கும். வெறுப்பு ஏற்படும் சொற்களை அறவே ஒதுக்க வேண்டும். நீங்கள் வேலைக்கு சென்று வரும்போது மனைவிக்கு பிடித்த சிற்றுண்டி போன்றவற்றை வாங்கி வரலாம். விடுமுறை நாளில் அவருக்கு சமைத்து கொடுத்து மகிழலாம்.
உங்களின் வார்த்தையே உங்கள் மீது அன்பு வைத்த மனைவியின் பாசத்தை வெளிக்கொணரும். அவர்கள் கண்ணாடி போன்றவர்கள். நீங்கள் காட்டுவதைத்தான் திரும்பி செய்வார்கள். அது அன்போ, கோபமோ, அறமற்ற பேச்சோ..