#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடலுக்கு ஆரோக்கியத்தை வாரிவழங்கும் வாழைப்பூ துவையல்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!
உடலுக்கு அதிக நார்சத்துக்களை வழங்கும் வாழைப்பூ மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாகும். மூலநோய் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக அமைகிறது. இன்று வாழைப்பூ துவையல் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - ஒன்று
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
புளி - எலுமிச்சைபழ அளவு
காய்ந்த மிளகாய் - 4
துருவிய தேங்காய்- 3 ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட வாழைப்பூவை சுத்தம் செய்து சமைப்பதற்கு முன் அதனை மோரில் ஊற வைக்க வேண்டும்.
★பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடலைபருப்பு, பெருங்காயத்தூள், புளி, காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்க ஆரம்பிக்க வேண்டும்.
★அடுத்து மிக்ஸியில் ஆற வைத்த அனைத்தையும் சேர்த்து தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவையான வாழைப்பூ துவையல் தயார். இதனை இறுதியில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறலாம்.