#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுவையான வாழைப்பூ போண்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி?..!
நாம் வாழைப்பூவில் கூட்டு, பொரியல் மற்றும் வடை போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில், வாழைப்பூவை வைத்து வாழைப்பூ போண்டா செய்வது எப்படி என இன்று காணலாம்.
தேவையான பொருள்கள்:
உளுந்து - கால் கிலோ,
வாழைப்பூ - ஒன்று,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தேங்காய்ப்பூ - சிறிதளவு,
மிளகு - ஒரு கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
எடுத்துக்கொண்ட உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், தேங்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாழைப்பூவினை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கியதும், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை போன்றவற்றை நறுக்க வேண்டும்.
அரைத்துவைத்த உளுந்து மாவுடன் தேங்காய், வாழைப்பூ, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, உப்பு போன்றவற்றை பிசைந்து, வானிலையில் எண்ணெய் ஊற்றி பிசைந்த மாவினை போண்டா போல உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பூ போண்டா தயார்.