டெங்கு காய்ச்சலை இயற்கை முறையில் தடுக்கும் எளிய முறைகள் இதோ.!



How to prevent dengue virus

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் கொசுக்களின் மூலம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் பயன்படுத்தினாலும், எளிதாக இயற்கையான மூலிகை மூலம் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் தாக்குவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சல் தாக்காது என்று கூறப்படுகிறது.

Dengue virus

அவ்வாறு டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எந்த மாதிரியான இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மனிதனின் உடலுக்கு அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதற்கு துளசி இலை மற்றும் கருப்பு மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம்.

Dengue virus

மேலும் பப்பாளி இலைகளை நன்றாக நசுக்கி அதன் சாறு எடுத்து குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் தாக்காது எனவும் உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால், அடிக்கடி நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் போன்றவை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.