மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
80 வயதிலும் உங்கள் பற்கள் வலிமையாக இருக்கவேண்டுமா? இதனை பின்பற்றி பயன்பெறுங்கள்!
பற்களுக்கு சிறந்த பல் பொடி ஒன்றை நீங்கள் வீட்டிலே தயாரித்து கொள்ளலாம். நீங்கள் வீட்டிலே தயாரிக்கும் இந்த பல்பொடிக்கு உள்ள பலன்களை தெரிந்துகொண்டால், அனைவரும் பயன்படுத்துவீர்கள். முதலில் இந்த பற்பொடியை எப்படி செய்வது என்று பார்ப்போம். களிப் பாக்கு, படிகாரம்,
சமையல் உப்பு, மாசிக்காய் இவற்றை நன்கு அறைத்துப் பின் நான்கையும் சம அளவு எடுத்து கலந்து பல்ப்பொடியாகப் பயன்படுத்தலாம்.
இதனை பயன்படுத்தினால் ஈரு வீக்கம், பல் வலி ஒரே நாளில் குணமாகும். ஆரம்பக்கட்டத்தில் பல் அசைவில் இருந்தால் அசைவு நின்று கான்கிரீட் போட்டது போல பல் கெட்டிப் படும். பல் வலி, ஈரு வீக்கம் இருந்தால் அந்த இடத்தில் இப்பொடியை வைத்து, சிறிது நேரம் விரலால் பிடித்துக் கொண்டிருந்தால் ஒரே நாளில் பலன் கிடைக்கும்.
அதேபோல் ஆலம் விழுது பற்களுக்கு வீரியமூட்டும் அதிமருந்து ஆகும். தினமும் ஆலமரத்தில் உள்ள விழுதை எடுத்து பல் துலக்கி வந்தால் 80 வயதிலும் பற்கள் வலிமையாக இருக்கும். அதானல் தான் ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி உண்டு.
அதேபோல் வேப்பமரத்தின் குச்சியை கொண்டு நுனியில் நன்கு கடித்து அதன் மூலம் பல் துலக்கினால் பற்கள் உறுதி பெற்று வாய் துர்நாற்றம் நீங்கும். அதனால் தான் ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி வந்தது.
ஆல் என்பது ஆலமரம். வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் துலக்க பல்வளம் சிறக்கும்.