தாய்திருநாட்டில் தயாரிக்கப்பட்டு பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் கர்ப்பப்பை வாய்புற்றுநோய் தடுப்பூசி..!



India First Vaccine to Cervical Cancer

இந்தியத்திருநாட்டில் பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியானது அறிமுகம் செய்யப்படுகிறது. 

பெண்களுக்கு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை பொறுத்தவரையில் மார்பகம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பப்பை வாயில் தொற்று இருக்கும் போதே அதனை கண்டறிந்துவிட்டால் புற்றுநோயை தொடர்ச்சியிலேயே தடுத்துவிடலாம். 

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க முன்னதாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பெறப்பட்டவை ஆகும். ஆனால், இந்திய வரலாற்றில் முதல் முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோக்கான தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. 

இதற்கான முதற்கட்ட மற்றும் இரண்டாம்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. சீரம் நிறுவனத்திற்கு தடுப்பூசி தயாரிக்க ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது பரிசோதனைகள் வெற்றியடைந்ததை தொடர்ந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி அறிமுகம் செய்யப்படுகிறது.