மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினமும் முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் படிங்க!
இன்றைய அவசர உலகில் எதற்கெடுத்தாலும் அவசரமாக ஓடும் நபர்கள்தான் அதிகம். அதிலும் குறிப்பாக காலை உணவை தவிர்த்து அலுவலகத்திற்கு செல்லும் நபர்கள் ஏராளம்.
பொதுவாக காலை உணவு என்பது மிகவும் கட்டாயம். காலை உணவை கட்டாயம் தவிர்க்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் காலை உணவுடன் ஏதேனும் ஒரு ஊட்டச்சத்துள்ள பொருளை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. அத்தகைய ஊட்டச்சத்துள்ள பொருள்தான் நாம் தினமும் பயன்படுத்தும் முட்டை.
விரைவில் செரிக்க கூடிய உணவுகளில் முட்டையும் ஓன்று. இதில் நமது உடலுக்கு தேவையான சத்தான பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளது. மேலும் நாம் அனைவர்க்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு முட்டை.
முட்டையில் புரதசத்து அதிகம் உள்ளது. இது மனிதனிற்கு தேவைப்படும் சத்துகளிலில் மிகவும் முக்கியமான ஒன்றும் கூட. மேலும் முட்டையில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. இது நமது எலும்பிற்கும், பல்லிற்கும் மேலும் வலிமை சேர்க்க உதவுகிறது.
கண் சம்மந்தமான நோய்கள், கண் புரை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது மேலும் பயனளிக்கும்.
எனவே எந்தவித தயக்கமும் இன்றி நாம் தினமும் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கறிக்கோழி முட்டைகளை தவிர்த்து நாடு கோழி முட்டைகளை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் சிறந்தது.