மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிட்டால் இவ்வளவு தீமைகளா?. விபரம் இதோ.!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பலகாரங்கள் பிடிக்காத நபர்கள் யாரும் இல்லை. பலரும் இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் இவ்வகை பலகாரங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிடும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர்.
இது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிட்டால் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதேபோல காலையிலேயே இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதோடு பசியும் அதிகரிக்கும்.
உணவை எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வைட்டமின் உட்பட எந்த சத்துக்களும் இல்லாத இனிப்பை சாப்பிடுவதால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்காது. அதேபோல இனிப்பு வகை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது உடல் எடை அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும்.