ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இரவு நேரத்தில் பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?.. அசத்தல் தகவல் இதோ.!
தினமும் காலை நேரத்தில் நாம் பற்களை துலக்கி உடலை புத்துணர்ச்சியாக்குவது வாடிக்கையானது. ஒருசிலர் இரவு நேரத்திலும் பற்களை துலக்குவார்கள். இன்று இரவில் பற்கள் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
காலை மற்றும் இரவு நேரங்களில் பற்களை துலக்குவதால், வாயில் ஆரோக்கியம் மேம்படும். ஈறு சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் குறையும். இரவில் பற்களை துலக்குவதால், பற்களில் இருக்கும் மஞ்சள் நிற படலம் நீக்கப்பட்டு, ஈறுகளின் ஆரோக்கியம் புதுப்பிக்கப்படும்.
இரவு நேரத்தில் உறங்கும் முன் பற்களை துலக்குவது, வாயில் பாக்டீரியா பெருகுவதை தடுக்கும். பற்கள் சொத்தையாகும் அபாயத்தினை குறைக்கும். உண்ட உணவுகள் பற்களின் இடையே தங்கி, பாக்டீரியாக்கள் பெருகும் வாய்ப்புகள் குறைக்கப்படும்.
படுக்கைக்கு முன்பு பற்களை துலக்குவதால், வாய் புத்துணர்ச்சியோடு இருக்கும். வாயின் ஆரோக்கியம் இதயத்தோடு தொடர்பு கொண்டது. ஆகையால் வாயின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், இதய நோயின் அபாயமும் குறையும்.