மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை பிறப்பதை தடுக்கும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள்.! நியூயார்க் மருத்துவர் அதிர்ச்சி தகவல்.!
அன்றாடம் சாப்பிடும் உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமாக இருக்கிறதோ? அதே அளவிற்கு நாம் சமைக்க பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அலுமினிய பாத்திரங்கள் மற்றும் நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவதன் காரணமாக உடல் நலத்தில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நியூயார்க்கை சேர்ந்த ஒரு மருத்துவர் இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் ஒரு மருத்துவர். நான் இதுபோன்ற நான் ஸ்டிக் பேன்களை சமையலுக்கு பயன்படுத்த மாட்டேன். இந்த பேன்களில் கீரல் ஏற்பட்டால் நமது உணவில் மில்லியன் கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் சேரும்.
இந்த மைக்ரோ பிளாஸ்டிக் நமது உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கிறது. இதன் காரணமாக, நமது உடலில் இருக்கும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இது கருவுறுதல் பிரச்சனை மற்றும் புற்றுநோய் அபாயத்தை கூட ஏற்படுத்தும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.