மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசையாக வாங்கி சாப்பிடும் நூடுல்ஸ் தயாரிக்க 2 நிமிடம், செரிக்க 2 நாள்?; பெற்றோர்களே தப்பு செய்யாதீங்க.!
தற்போதுள்ள விரைவான காலகட்டத்தில் பேச்சுலர், குழந்தைகள் என அனைவரும் விரைவில் சமைக்கக்கூடிய உணவுப் பொருட்களை விரும்பி உண்டு வருகின்றனர்.
எனக்கு நூடுல்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காத குழந்தைகளே கிடையாது, பெரியவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி அனைவரும் எல்லா நேரமும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும் நூடுல்ஸில், பேராபத்து ஒளிந்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உடல் பருமன் முதல் ஜீரணக் கோளாறு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல உடல் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது. இரண்டு நிமிடத்தில் ரெடியாகிவிடும் என்று மக்களை ஈர்க்கும் விளம்பரங்கள் போன்ற உத்திகள் மூலம், குறிப்பாக இந்திய குழந்தைகளை அடிமையாக்கி வைத்திருக்கிறது.
நூடுல் தயாரிப்பு நிறுவனங்கள் பிரபலங்களை வைத்து சத்தானது, சுவையானது, ஆரோக்கியமானது என்று மக்களையும் நம்ப வைத்துள்ளது. ஓராண்டுக்கு 5.5 மில்லியன் பாக்கெட்டுகள் நூடுல்ஸை மக்கள் சாப்பிடுகின்றனர் என்ற சர்வே பகீர் தகவலை தெரிவித்துள்ளது.
நூடுல்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் நிகழும்?..
ஃபாஸ்ட் ஃபுட்டில் ஒன்றான பரோட்டாவின் பாதிப்புகள் தெரிந்த அளவுக்கு கூட, நூடுல்ஸ் பாதிப்புகளை மக்கள் தெரிந்து கொள்வதில்லை.
உடனடி நூடுல்ஸ் உணவுகள் தயாரிக்க எளிதாக இருந்தாலும், சாப்பிடும் போது அதிக அளவு சோடியம் கேடான கொழுப்பு மற்றும் சர்க்கரை தாக்கம் கொண்டு இருப்பதால், ஜீரண கோளாறு உட்பட பல்வேறு வளர்ச்சிதை மாற்ற நோய்களையும் உண்டாக்குகிறது.
மேலும், நீரிழிவு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு, சிறுநீரக பாதிப்பு, இதய நோய்கள் என பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடந்த ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நூடுல்ஸில் இருப்பது தான் என்ன?.
பெரும்பாலான நூடுல்ஸ் தயாரிப்புகள் மைதாவை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. மைதாவும், அதில் நிறைந்துள்ள ரசாயனங்களும் சத்தற்றவை. ஆனால் கலோரி மிகுந்தவை.
இதை அதிகம் சாப்பிடும் போது உடல் பருமன் ஏற்படுகிறது. இது குடல் வால் பகுதியில் சென்று நோய் தொற்றுகளையும் உண்டாகும். நூடுல்ஸ்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
நூடில்ஸில் இருக்கும் டிரான்ஸ் கொழுப்புகள் உடலுக்கு பல கேடுகளை தரும். இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய் போன்ற ஆபத்தை அதிகரிக்கும். இதன் சுவைக்கு அடிமையாகும் வகையில் உள்ள மசாலா திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுகிறது.
கொழுப்பு சத்து அதிகம். வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து போன்றவை குறைவு. துரித உணவில் நூடுல் தயாரிக்கும் போது, வழுவழுப்பு தன்மைக்காகவும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும் வாக்ஸ் மெழுகு பேக் செய்யப்படுகிறது.
வெந்நீரில் போடும்போது வெள்ளை வெள்ளையாக வேக்ஸ் மிதப்பதை நாம் கண்கூடாக காணலாம். இந்த மெழுகை ஜீரணிக்கும் திறன் நமது உடலுக்கு இல்லை. புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்க இரண்டு நிமிடம் ஆனாலும், செரிப்பதற்கு இரண்டு நாள் ஆகும்.