அடேங்கப்பா... உப்பு கண்டத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.? ஆச்சரியமான தகவல்.!



nutritional-benefits-of-dry-meat-ranugy

தற்போது இஸ்லாமியர்களின் புனிதமிகு ரமலான் மாதம் தொடங்கி இருக்கிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை எழுந்து உணவு சாப்பிட்டு பகல் நேரம் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் இறைவனுக்காக விரதம் இருப்பார்கள் மாலை மீண்டும் உணவு சாப்பிட்டு தங்களது விரதத்தை முடித்துக் கொள்வார்கள். 30 நாட்களுக்கு இந்த நோன்பு அவர்கள் கடைப்பிடிப்பார்கள்.

இந்த ரமலான் மாதம் நோன்பின் போது முஸ்லிம்கள் பொதுவாக எடுத்துக் கொள்ளும் உணவுகளில் முக்கியமானது உப்பு கண்டம். ஆட்டு இறைச்சி மாட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சியில் உப்பு மற்றும் மசாலாக்கள் சேர்த்து வெயிலில் காயவைத்து பதப்படுத்தி பயன்படுத்துவது உப்பு கண்டம் ஆகும். இது புரதச்சத்திற்கான சிறந்த ஆதாரமான உணவாக இருக்கிறது.

healthy tipsஉப்பு கண்டத்தில் அதன் எடைக்கு சமமான அளவில் புரோட்டின் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் மூடுகிறோம் உப்புக்கண்டம் சாப்பிட்டால் அதில் 50 கிராம் புரதம் கிடைக்கும். மேலும் உப்பு கண்டத்தில் உப்பு அதிகமாக இருப்பதால் ரமலான் மாதம் ஒன்றின் போது தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு அதிக நீர் இழப்பு ஏற்படாமலும் இது தடுக்கிறது.

healthy tipsஅதே நேரம் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் அதிகப்படியான உப்புச்சத்து உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் சிறுநீரக பாதிப்பு மேலும் அதிகரிக்கவும் வழிவகுக்கும். எனவே குறிப்பிட்ட அளவு இதனை பயன்படுத்தி வந்தால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.