அச்சச்சோ.. வயிற்றில் உள்ள கருவின் மூளையை தாக்கும் கொரோனா.. கர்ப்பிணி பெண்களே கவனமா இருங்க..!!
கடந்த 2020-ஆம் ஆண்டு உலக நாடுகளிடையே பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல பரிணாம மாற்றங்களை அடைந்துவிட்டது. அது பாதிக்கப்படும் நபர்களுக்கு உயிரிழப்பு, நீண்டகால தாக்கம், ஏற்புடைய நோய்கள் ஆகியவற்றையும் விட்டு செல்கிறது.
இந்த நிலையில், தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தையின் மூளையை கொரோனா தாக்குகிறதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. அமெரிக்காவில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்த இரண்டு இளம்பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறந்த நாளிலேயே வலிப்பு ஏற்பட்டு வளர்ச்சி இல்லாமல் இருந்த நிலையில், இந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை 13 மாதங்களில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டது என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.