மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. இனிப்பு, காரம் அதிகம் சாப்பிடுவதால் இப்படி ஒரு பிரச்சனை வருமா?.. கவனமா இருங்க..! உடலில் விஷத்தன்மையை அதிகரிக்குமாம்..!!
முன்புள்ள நாட்களில் இனிப்பு, கார வகைகள் மற்றும் நொறுக்குதீனிகள் அதிகளவில் யாராலும் சாப்பிடப்பட்டதில்லை. பண்டிகை காலங்களில் இட்லி, தோசை மட்டும் கிடைத்த ஆண்டுகளும் உள்ளன. இன்றளவில் நொறுக்குத்தீனிகள் அதிகரித்துள்ள நிலையில், பலரும் அதனை அதிகளவில் உண்டு வருகின்றனர்.
நாம் அளவுடன் உண்டால் வளமான வாழ்வு கிடைக்கும். ஒருவரின் உடலில் செரிமான சக்தியை பொறுத்தே உணவின் அளவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இயற்கையான உணவுகளை நாம் சாப்பிடுவது நல்லது. உரிய காலத்தில் ஜீரணமாகும் உணவுகளை தேடி உட்கொள்ள வேண்டும். உணவின் அளவை குறைந்து உண்டால் உடலின் பலம் மற்றும் பொலிவு குறையும், வாத நோய்கள் ஏற்படும்.
இனிப்பு, காரம் உட்பட பல வரையான உணவுகளை அதிகஅளவு சாப்பிட்டால் கபம், வாதம், பித்தம் ஏற்படும். செரிமான கோளாறுகள் தோன்றும். வாந்தி, வயிற்றுப்போக்கு கூட ஏற்படும். வயிற்று வலி, தலைவலி, உடல் மந்தம் போன்றவையும் ஏற்படும். இதற்கு ஆமம் என்று பெயர். இவ்வாறாக உடலுக்கு கேடானதை சாப்பிட்டால் உடலில் விஷத்தன்மை அதிகரிக்கும். இதனை ஆமவிஷம் என்று அழைப்பார்கள்.
அன்றைய நாட்களில் இவ்வாறான பிரச்சனை இருப்போருக்கு வசம்பு கொடுத்து வாந்தி எடுக்க வைப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து கொடுக்காமல் செரிக்கவும் உடலை பழக்கப்படுத்துவார்கள். ஒருவர் சாப்பிடும் முன் குளித்துவிட்டு அமைதியான மனநிலையோடு உணவை எடுக்க வேண்டும்.