உஷார்.. அடிக்கடி தலைவலி, குமட்டல் வருமா?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! மூளைக்கட்டியின் அறிகுறியாக இருக்கலாம்..!!



Signs of brain tumor tamil

உடலில் எப்பகுதியில் எந்த பிரச்சனை என்றாலும் பெரிதாக அது தெரியாது. ஆனால் தலையில் ஒரு பிரச்சனை என்றால் தலையே சுற்றிவிடும். மூளையில் கட்டி என்று கூறினால் பயம் கொள்ளாதவர்கள் யாராகவும் இருக்க முடியாது. இக்கட்டிகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாத பட்சத்தில் அது உயிருக்கும் ஆபத்தாகும். மூளையில் உருவாகும் கட்டிகளில் பல வகைகள் உள்ளன. Malignant என்று கூறப்படும் கேன்சர் கட்டிகளாகவும், begin என்று கூறப்படும் கேன்சர் அல்லாத கட்டிகளாகவும் இருக்கலாம். 

கட்டி உருவாகியுள்ள இடம், நரம்பு மண்டலத்தில் தாக்கம் போன்றவற்றைப் பொறுத்து ஒவ்வொன்றும் மாறுபடலாம். 30 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடிய மூளைகட்டி குறித்து அனைவரும் தெரிந்திருப்பது அவசியம். எங்கு வேண்டுமானாலும் கட்டி வரலாம். 

Brain tumor

மூளை மற்றும் தலைப்பகுதியில் கட்டிகள் அழுத்தத்தை கொடுப்பதால் வீக்கம், வலி போன்றவை ஏற்படுகிறது. திரவத்தின் ஓட்டத்தினை தடுத்து நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தும். அது எந்த இடத்தில் உருவாகிறது என்பதை பொறுத்து ஒவ்வொரு அறிகுறியும் மாறும். தலைவலியை தவிர்த்து பார்வை இழப்பையும் ஏற்படுத்தும். 

இதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் மூலமாக கண்டறியலாம். அதற்கான சிகிச்சைகளை உடனடியாக செய்வது நல்லது. மூளையில் இருக்கும் கட்டிகள் பெரிதாக இருந்தாலும் உடலில் பிற பகுதிகளுக்கு பரவாது.