மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆந்தை போல இரவில் கண்விழிப்பா?.. ஆரோக்கியத்தை அடியோடு அழிக்கும் தூக்கமின்மை பிரச்சனை.!!
வயதான பின்னர் பெரும்பாலானோருக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகளவு ஏற்படுகிறது. 60 வயதினை கடந்த பின்னர் அனைவருக்கும் தூக்கம் குறைவது இயல்பானது. இக்காலகட்டத்தில் 5 மணிநேர தூக்கமே போதுமானது தான். இதில், ஒரு நபர் எவ்வுளவு நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் என்பது தான் முக்கியத்துவம் பெறுகிறது. உடலுக்கு ஓய்வு கொடுப்பது மூலமாக, மீண்டும் புத்துணர்ச்சியோடு செயல்பட, மூளை தன்னைத்தானே புதுப்பிக்கும். ஒருவரின் உடலுழைப்பு மற்றும் தூங்கும் விதம், சுற்றுசூழல், உடல்நலம், மனநலத்தை பொறுத்து பல விஷயங்கள் அமைகிறது.
முதுமையில் வயது மற்றும் உடல்நலப்பிரச்சனை காரணமாக உறங்கும் நேரம் குறைந்து இருப்பினும் தூக்கத்தின் அவசியம் குறைவது கிடையாது. ஒரு நாளில் 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை உறங்குவது நல்லது. தூக்கம் குறையும் நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இளவயதில் தேவையான அளவு உறங்காத நபர்களுக்கு, 40 வயதிலேயே ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுகிறது. சம்பந்தம் இல்லாத கோபம் மற்றும் எதற்கும் எரிந்து விழுவது போன்ற பிரச்சனையும் ஏற்படுகிறது.
தூக்கம் ஒருவருக்கு தொடர்ந்து கெடும் நிலையில் பசி குறைந்து, அஜீரண பிரச்சனை ஏற்படும். உணவில் அளவு குறைந்து, உடல் எடையும் குறையும். பணியிலும் ஆர்வம் குறைந்து, பகல் முழுவதும் தூக்க கலக்கத்தில் இருக்க நேரிடும். நீண்ட கொட்டாவி, சோர்வு மற்றும் தலைவலி பிரச்சனை நிரந்தரமாகும். மாதக்கணக்கில் உறக்கமின்மை பிரச்சனை தொடரும் பட்சத்தில் உயர் இரத்த அழுத்தம், நீரழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனையும் ஏற்படும். தற்போது, கூட்டுக்குடும்பம் என்ற கலாச்சாரம் மறைந்து தனிக்குடித்தனம் அதிகரித்து வருகிறது. இதனால் முதுமையில் பெரும்பாலானவர்கள் தனிமையில் இருந்து வருகிறார்கள். அந்த தனிமையும் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.