அச்சோ.. உங்களுக்கு புகைப்பழக்கம் இல்லாதபட்சத்தில் இப்படியொரு ஆபத்து.. உஷாராக இருங்க மக்களே.!



smoking-habit-health-tips-tamil

இன்றுள்ள காலத்தில் புகைபிடிப்போரின் எண்ணிக்கையானது வெகுவாக அதிகரித்துள்ளது. இளம் வயதுள்ள சிறார்கள் முதல், முதியவர்கள் வரை பீடி, சிகிரெட் போன்று பல்வேறு போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். புகை பிடிப்போரை விட அவர்களுக்கு அருகே எவ்வித பழக்கமும் இல்லாமல் இருப்போருக்கு பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுகுறித்து இன்று தெரிந்துகொள்ளலாம். 

புகைபிடிப்பவர் வெளியிடும் புகையானது சுவாச ஆரோக்கியத்தை பாதிக்கும். புகை பிடிப்போர் எந்தளவுக்கு பாதிக்கப்படுவாரோ, அதே அளவுக்கு புகைப்பழக்கம் இல்லாதவரும் பாதிக்கப்படுகிறார். அதனைப்போல சுவாசக்குழாய் நோய்தொற்று, நுரையீரல் புற்றுநோய், மூச்சுக்குழாய் அலர்ஜி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனையும் ஏற்படுகிறது. 

Smoking Habit

அதனைப்போல, புகைபிடிக்காமல் புகையை சுவாசிப்போருக்கு இதயநோய் 25 % ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு சுவாசப்பாதை தொற்று, ஆஸ்துமா போன்றவையும் ஏற்படும். இதனால் புகை பிடிப்போர் அப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதோர் புகை பிடிப்போரிடம் இருந்து விலகி இருங்கள்.

புகைப்பழக்கம் உடல் நலனுக்கு எமன்;  உயிரை கொல்லும்.

Smoking Is Injurious to Health; Smoking Kills