#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"காசு தரலன்னா, போட்டோ ரிலீஸ்.." இன்ஸ்டா நட்பால் இளம் பெண்ணுக்கு வந்த வினை.!! தந்தை, மகன் கைது.!!
சென்னையில் இளம் பெண்ணின் அந்தரங்க படம் சமூக வலைதளத்தில் வெளியானது தொடர்பாக தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வளசரவாக்கம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை இளைஞருடன் பழக்கம்
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு சுஜித் என்ற நபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அப்போது சுஜித் வற்புறுத்தி கேட்டதை தொடர்ந்து அந்த இளம் பெண் தனது அந்தரங்க படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் சுஜித்திற்கு அனுப்பி இருக்கிறார்.
பணம் கேட்டு மிரட்டல்
அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய பிறகு இளம் பெண்ணை தொடர்பு கொண்ட சுஜித் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். வேறு வழி இல்லாமல் அந்த இளம் பெண்ணும் சுஜித்திற்கு பணம் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுஜித் மற்றும் அவரது தந்தை வின்சென்ட் ஆகியோர் இளம் பெண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக அனுப்ப வேண்டும் என மிரட்டி இருக்கின்றனர். அப்போது இளம் பெண்ணிடம் பணம் இல்லாததால் அவர் அனுப்பவில்லை.
இதையும் படிங்க: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.!! எமனாக மாறிய மச்சான்.!!
காவல்துறையில் புகார்
இளம் பெண் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சுஜித், அந்தப் பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக சுஜித் மற்றும் அவரது தந்தை வின்சென்ட் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களது செல்போனை கைப்பற்றி சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "எங்க அம்மா வர மாட்டாங்களா.." கணவனால் கோமாவுக்கு சென்ற மனைவி.!! கதறும் குழந்தைகள்.!!