மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் குழந்தைகளிடம், தப்பி தவறி கூட இதை செய்யாதீர்கள்.. பெற்றோர்களை கவனம்.!
ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தை வளர்ப்பு காலத்தில் மிகவும் பொறுப்புடன் இருப்பது அவசியம். அதிலும், பெண் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் மற்றும் பொறுமையுடன் இருக்க வேண்டும். இப்போது, பெண் குழந்தைகளிடம் எந்த எந்த விஷயங்களை சொல்லக் கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.
சுதந்திரமாக பேச அனுமதி தருவது அவசியம் :
பெண் குழந்தைகளுக்கு சுதந்திரமாக பேசவும், அவர்கள் தங்கள் கருத்துகளை கூறவும் முழு உரிமை உண்டு. அவ்வாறு இல்லாமல் " நீ பெண் பிள்ளை இதில் நீ கருத்து கூற வேண்டாம்" என்று கூறாதீர்கள். மேலும், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படாமல், தனியாக அவர்களுடன் அமர்ந்து அறிவுரை கூறுங்கள். மேலும், பெண் குழந்தைகளிடம் இந்த விளையாட்டை " நீ விளையாட கூடாது! இது ஆண்கள் விளையாடும் விளையாட்டு " என்று பாலின பாகுபாடுகளை காண்பிப்பது தவறு.
பாலின பாகுபாடு :
ஆண் பிள்ளைகள் அவர்களின் விருப்பம் போல் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் பேசலாம் சத்தமாக சிரிக்கலாம். ஆனால், பெண் பிள்ளைகள் சத்தமாக பேசவோ, சிரிக்கவோ கூடாது என்று கூறாதீர்கள். இவ்வாறு, சில பெற்றோர்கள் கூறுவதால் பெண் குழந்தைகள் மனம் மிகவும் வேதனை அடையும்.
ஆடை சுதந்திரம் :
பெண் பிள்ளைகளிடம் " நீ இவ்வாறு ஆடை அணியக் கூடாது " என்று கண்டிப்புடன் கூறாதீர்கள். அவர்கள் அணியும் ஆடை விஷயத்தில் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளியுங்கள். மேலும், அவர்கள் அணியும் ஆடை மோசமானதாக இருந்தால் தனியாக அழைத்து அறிவுரை கூறுங்கள்.
பெண் பிள்ளைகள் உடல் எடை :
பெண் பிள்ளைகளிடம் " நீ உடல் பருத்து இருக்கிறாய் " என்று உருவக் கேலி செய்யாதீர்கள். பெண் என்றாலே மெலிவான உடல் எடையை தான் கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆகையால், அவர்கள் விரும்பும் ஆரோக்கியமான உணவை உண்ண அனுமதி அளியுங்கள். மேலும் அவர்களிடம் அன்புடனும்,பொறுமையுடனும் ஆரோக்கியம் பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் ஆலோசனை கூறுங்கள்.
தன்னம்பிக்கையை குறைக்காதீர்கள் :
பெண் பிள்ளைகளிடம் " உன்னால் இதை செய்ய முடியாது " என்று கூறாதீர்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை இழக்க செய்வதோடு அவர்களின் கனவை முற்றிலும் சீர்குலைத்து விடும். மாறாக, அவர்களின் கனவு என்னவென்று புரிந்து கொண்டு ஊக்கப்படுத்துங்கள்.