திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்தியாவில் சட்டவிரோத/திட்டமிடப்படாத கருகலைப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.. ஐ.நா நிதியம் பகீர் தகவல்.!
ஐ.நா மக்கள் தொகை நிதியம் அமைப்பு உலகளவில் நடத்திய திட்டமிடப்படாத கருக்கலைப்புகள் தொடர்பான முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, உலகளவில் 12 கோடி கருக்கலைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாளொன்றுக்கு சராசரியாக 3 இலட்சத்து 30 ஆயிரம் கருக்கலைப்புகள் நிகழும் நிலையில், இந்தியாவில் 67 % கருக்கலைப்பு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நடைபெறுகிறது. இந்த சட்டவிரோத கருக்கலைப்பு சிக்கலால் ஒரு நாளில் 8 பேர் உயிரிழக்கின்றனர்.
மேலும், கருத்தடைகளை முறையாக பயன்படுத்தாமல் இருத்தல் அல்லது வலுக்கட்டாயமான பலாத்காரம் போன்ற காரணத்தால் உருவாகும் கர்ப்பம் போன்றவற்றால் திட்டமிடப்படாத கருக்கலைப்பு நிகழ்கிறது. இந்தியாவில் நடைபெறும் 7 கருக்களைப்பில் ஒன்று திட்டமிடப்படாத கருக்கலைப்பு ஆகும்.
இதனைப்போல, பாலின பாகுபாடின் காரணமாகவும் அவை நிகழ்கிறது. கருத்தடை முறைகள், கருத்தடை சாதனங்கள் பல இருந்தாலும், அதனை சரியாக கையாள்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கர்ப்பத்தை தடுக்க விரும்பும் பெண்களில் 25 கோடி பேர் கருத்தடை சாதனத்தை உபயோகம் செய்வது இல்லை.
இதனால் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு என்பது தாய் மற்றும் சேயின் இறப்பிற்கும் வழிவகை செய்கிறது. பிற நோய்ப்பதிப்புகளுக்கும் உள்ளாக்குகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் திட்டமிடப்படாத கர்ப்பம் அதிகரித்து, 1 கோடியே 56 இலட்சம் கருக்கலைப்பு ஆபத்தான வகையில் செய்யப்படுகிறது.
2018 ஆம் வருடம் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருகலைப்பால் 13 பெண்களும் உயிரிழந்துள்ளனர். கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. பாலியல் கல்வி தொடர்பான புரிதல் இல்லாத காரணத்தாலும் திட்டமிடப்படாத கருக்கலைப்பு, உயிரிழப்பு நிகழ்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.