அடடே,! இனி தர்பூசணி விதைகளை குப்பையில் போட மாட்டீர்கள்.!! அசர வைக்கும் மருத்துவ குணங்கள்.!!



water-melon-seeds-health-benefits

தர்பூசணி கோடை கால பழமாகும். கோடை வெயிலின் சூட்டை தணிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அதிகமான நீர்ச்சத்தால் நிறைந்துள்ள இந்த பழத்தில் வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்து இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் தர்பூசணி பழத்தின் விதைகளை சாப்பிடுவதில்லை. அவற்றின் விதைகளில் ஏராளமான மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் என்றழைக்கப்படும் நுண் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தர்பூசணியின் விதைகளில் ஜிங்க் மக்னீசியம் பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்புக்களும் நிறைந்து இருக்கிறது. இவற்றில் இருக்கும் ஜிங்க் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குகிறது. தர்பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய நல்ல கொழுப்புகள் நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேரவிடாமல் தடுக்கிறது. இது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாகும்.

healthy tipsதர்பூசணி விதைகள் நம் உடலில் இன்சுலின் அளவை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய மக்னீசியம் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டோடு இருப்பதற்கு உதவுகிறது. தர்பூசணி விதைகளில் இருக்கக்கூடிய நல்ல கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை இதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கும் சீராக செயல்படுவதற்கும் உதவுகின்றன.

healthy tipsதர்பூசணி விதைகளில் இருக்கும் வைட்டமின் பி நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்சிடென்ட்கள் நுரையீரலில் செயல்பாட்டிற்கு உதவுவதோடு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்தும் உடலைக் காக்க உதவுகிறது. இவை உடலுக்கு பல நன்மைகளை கொண்டிருப்பதோடு சரும  ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தர்பூசணி விதைகளில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதியாவதற்கும் உதவி புரிகிறது.