உடல் எடை குறைப்பது சவாலா இருக்கா.?! இதை டிரை பன்னுங்க ரொம்ப ஈஸி.!



Weight loss diet foods suggestion 

காலை உணவாக கீழ்காணும் உணவுகளை எடுத்துக் கொள்வது உங்கள் எடை குறைப்புக்கு உதவும். 

ஓட்சில் நிறைய நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இருக்கின்றன. இது உடல் எடை குறைய உதவுவது மட்டுமல்லாமல் இதய நோய் அபாயங்களை குறைக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது. உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த ஓட்ஸ் உதவுகிறது. 

health tips

கோதுமை சப்பாத்தி அல்லது வெள்ளை நிற பிரட் காலை உணவாக சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? அதை முதலில் நிறுத்துங்கள். பல தானிய உணவு வகை இதை விட சிறந்தது.

சோள ரொட்டி மல்டிகிரேன் சப்பாத்தி அல்லது மல்டிகிரேன் பிரெட் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. எடை அதிகப்படியாக குறைய இது மிகவும் பயனுள்ளது.  

health tips

அன்றாடம் கஞ்சியை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடல் எடை குறைய உதவுகிறது. இத்துடன் பால் அல்லது காய்கறிகள் கலந்து குடிக்கலாம்.

இதில் கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. சத்துமாவு, கோதுமை மாவு உள்ளிட்டவற்றிலும் கஞ்சி செய்து சாப்பிடலாம்.