தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அச்சச்சோ.. பெரும் ஆபத்து..! பெண்களே சரியாக உறங்குகிறீர்களா?.. இல்லையேல் பிரச்சனை.!
உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல்வேறு விஷயத்தை பலரும் முயற்சித்து வரும் நிலையில், சரியான தூக்கமும் உடலுக்கு முக்கியம் என ஆய்வு தெரிவித்துள்ளது. சரியான உறக்கம் உடலின் எடையை எப்படி குறைக்க உதவுகிறது என்பது குறித்து இன்று காணலாம்.
உறக்கம் என்பது பசியை தூண்டும் ஹார்மோனின் செயல்பாடுகளை சீராக்கும். உறக்கமின்மை பிரச்சனை இருந்தால் அதிகளவு சாப்பிட வேண்டியிருக்கும். சரிவர உறங்காத பெண்கள், முறையாக உறங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவுகளை எடுத்துக்கொள்ள நேரிடும். இதனால் தொப்பை ஏற்பட்டு கவலை மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும்.
சரியாக உறங்கினால் உறக்கமின்மை, தொப்பை, கவலை போன்ற பல பிரச்சனைகளை விரட்டிவிடலாம். இரவு 7 மணிமுதல் 9 மணிநேரம் உறங்கும் பெண்களை விட, குறைவான நேரம் உறங்கும் பெண்களின் எடை விரைந்து கூடுகிறது. 7 மணிநேரத்திற்கு குறைவாக அல்லது 9 மணிநேரத்திற்கு அதிகமாக உறங்கும் பெண்களின் எடை கூடுகிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளையில் நன்றாக உறங்கினால் மறுநாளில் உடலுக்கு தேவையற்ற ஆற்றல் கிடைக்கிறது. உடற்பயிற்சி தூக்கத்தை சீர்படுத்துகிறது. சரியான உறக்கம் நமது வாழ்க்கையின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.