#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
சுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.!

ஒவ்வொரு வீட்டிலும் தினம்தோறும் சமையல் என்பது, மிகப்பெரிய விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. காலை எழுந்து பள்ளி, வேலைக்கு செல்லும் நபர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய அம்மா கால்களில் சக்கரம் இல்லாத குறையாக ஓடிக்கொண்டு இருப்பார்.
அன்றைய நாளில் சமையல் என்ன செய்வது என பலருக்கும் யோசனையும் இருக்கும். அந்த வகையில், இன்று எளிமையான பூண்டு குழம்பு செய்வது எப்படி? என தெரிந்துகொள்ளலாம். பூண்டுகுழம்பு உடலுக்கு நன்மை தரும். பூண்டு கார குழம்புடன் முட்டையை அவித்து சாப்பிட அறுசுவையும் நாக்கில் நாட்டியமாடும்.
இதையும் படிங்க: ருசியான பிரியாணி செய்ய ஆசையா? இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
பூண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு - 20,
புளி - எலுமிசையளவு,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
வெல்லம் - 3 கரண்டி,
வெந்தயம் - 1 கரண்டி,
மள்கு - 2 கரண்டி,
சீரகம் - 1 கரண்டி,
மிளகாய்தூள் - 3 கரண்டி,
மஞ்சள் தூள் - அரைக்கரண்டி,
உப்பு & எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட பூண்டை தோலுரித்து வைத்துக்கொள்ளவும். புளியை சிறிதளவு நீர் சேர்த்து ஊறவைத்து, கரைசலாக்கி வைக்கவும்.
பின் வானலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், மிளகு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதனுடன் பூண்டை சேர்த்து வதக்கவும்.
பூண்டின் நிறம் மாறியதும் இதனை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைத்த விழுதுடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு-உளுந்து, சிறிதளவு சீரகம், சிறிதளவு வெந்தயம், கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்து அதில் அரைத்து வாய்த்த பூண்டு கரைசலை சேர்த்து, நன்கு கொதிவந்து எண்ணெய் பிரிந்ததும் வெல்லத்தை கிளறி இறக்கினால் சுவையான பூண்டு குழம்பு தயார்.
இதையும் படிங்க: உலகம் எங்கே போனால் என்ன? நான் இருக்கேன்.. அம்மாவின் பாசம்.. நெகிழவைக்கும் வீடியோ.!