பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
டிசம்பர் 6 முதல் பள்ளிகள் திறப்பு! எந்தெந்த வகுப்புகளுக்கு.. கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் தற்போதும் இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனோ அச்சுறுதல் காரணமாக 2020 மார்ச் மாதம் இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தற்போது ஒவ்வொரு மாநிலமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுவையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதற்கிடையில் 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை, வெள்ளம் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டிசம்பர் 6 தேதி முதல் புதுவையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.