ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தேர்வே இல்லாமல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி..! தெலங்கானா அரசு முடிவு..! உச்சகட்ட மகிழ்ச்சியில் மாணவர்கள்..!
தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு இறுதி தேர்வு, பொது தேர்வு எழுதும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா அச்சத்தால் தேர்வு எழுத முடியாத சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் கிரேட் வழங்கவும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.