மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறப்பு வகுப்பிற்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் மிதந்த சோகம்! கதறும் பெற்றோர்
இந்தியா முழுவதும் பாலியல் வண்முறைகள் நாள்தோறும் அரங்கேறிய வன்னம் தான் உள்ளன. தண்டனைகள் எந்த அளவிற்கு கடுமையாக்கப்பட்டாலும் சில அரக்கர்கள் அதனைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அப்படி சில அரக்கர்கள் அரங்கேற்றிய கொடூர சம்பவம் கடந்த வியாழனன்று தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. அதுவும் 10 ஆம் வகுப்பு சிறப்பு வகுப்பிற்கு சென்ற பள்ளி மாணவி.
தெலுங்கானா மாநிலம் போங்கீர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 9 ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் கோடை விடுமுறையில் 10 ஆம் வகுப்பிற்காக சிறப்பு வகுப்பிற்கு தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இவ்வாறு, கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த தேடுதலில், வெள்ளிக்கிழமை சிறுமி ஒரு தண்ணீர் இல்லாத கிணற்றில் பிணமாக கிடப்பதை கண்டறிந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இந்த வழக்கில் உடனடியாக துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.