மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுமி பரிதாப பலி... பதறவைக்கும் துயர சம்பவம்.!
அடுக்குமாடி கட்டடத்தின், 12வது மாடியில் இருந்து கீழே விழுந்து பத்தாம் வகுப்பு மாணவி இறந்ததால், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் டென்னி குரியன். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரீமா. தம்பதிகளுக்கு ரெயா (வயது 15) என்ற மகள் உள்ளார். இவர்கள் கோட்டயம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அத்துடன் ரெயா கோட்டையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து நேற்று இரவு 10 மணி அளவில் மாணவி கீழே விழுந்துள்ளார். அப்போது யாரோ கீழே விழுவது போன்ற சத்தம் கேட்டதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மாணவி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதனைக்கண்டு உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக கோட்டயம் கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.