திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இறந்த பின்பும் 4 பேருக்கு வாழ்வளித்த 11 வயது சிறுமி! வேதனையிலும் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!
இமாச்சலப் பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உறுப்புகள் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசம் மண்டியைச் சேர்ந்தவர் நய்னா தாக்கூர். 11 வயது நிறைந்த அந்த சிறுமி மார்ச் 3ம் தேதி பெரும் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அச்சிறுமி சில தினங்களில் மூளைச்சாவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதனால் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் சில நோயாளிகளுக்கு பொருத்தமாக உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் சிறுமியின் இரு சிறுநீரகங்களும் பொருத்தமான நபர்களுக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளது. மேலும் கருவிழிகளும் இரண்டு பார்வையற்றவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகள் இறந்தும் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் என அவரது பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.