மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
117 வயதில் வருமானவரி செலுத்தும் மூதாட்டி..! இவரது சொத்து என்ன தெரியுமா..? நெகிழும் அதிகாரிகள்.!
தனது 117 வயதிலும் மூதாட்டி ஒருவர் தவறாமல் வருமானவரி செலுத்திவரும் நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பாராட்டியுள்ளனர்.
வருமான வரித்துறையின் 160 வது ஆண்டுவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் மிகவும் அதிக வயதுடைய வருமான வரி செலுத்தும் சிலரை வருமான வரித்துறை அதிகாரிகள் கௌரவித்து உள்ளனர்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் மீனா கிராமத்தை சேர்ந்த கிரிஜாபாய் திவாரி என்ற 117 வயதுடைய பெண் ஒருவர் ஆண்டுதோறும் தவறாமல் வருமானவரி செலுத்திவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாதாரண கிராமத்தை சேர்ந்த இவர் மிக பெரிய பணக்கார பெண்ணோ அல்லது பலகோடிகளில் சொத்து வைத்திருக்கும் நபரோ கிடையாது.
இவரது சிறிய சேமிப்பு தொகை மற்றும் ஓய்வூதிய வருமானத்திற்கான வருமான வரியை அவர் தவறாமல் ஆண்டு தோறும் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப்போன்றே மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ஈஸ்வரி பாய் (103), சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரை சேர்ந்த மீனா ரக்சித் (100), மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சார்ந்த கஞ்சன் பாய் (100) ஆகியோரும் அதிகவயதில் வருமானவரி செலுத்தும் இந்திய குடிமகன்களாவர்.
இதில் மேலும் பெருமையான விஷயம் என்வென்றால், இவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது..