குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
பாரில் ஆபாச நடனம் ஆடிய அழகிகள்: 13 பேர் பெண்கள் மீட்பு, 23 பேர் கைது...!
பாரில் ஆபாச நடனமாடிய 13 பெண்கள் மீட்கப்பட்டு, 23 வாடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை காட்கோபர் கிழக்கு பந்த் நகர் 90 ரோட்டில் இயங்கிவரும் மதுபான பார் ஒன்றில் ஆபாச நடனம் நடத்துவதாக சமூககுற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் காவல்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த பாரில் பெண்களை வைத்து ஆபாச நடனம் நடந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் ஆபாச நடனம் ஆடிய 13 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பார் மேனேஜர், கேஷியர் மற்றும் 7 பணியாளர்கள்,13 வாடிக்கையாளர்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரத்து 760 ரொக்கம், கணினி உபகரணங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.