மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணப்பெண் காதலனுடன் எஸ்கேப் ஆனதால் 13 வயது சிறுமிக்கு திருமண முயற்சி: மணமகனின் ஆசையில் ஆப்படித்த அதிகாரிகள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உண்ணாவ் மாவட்டத்தைச் சார்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு அப்பகுதியை சார்ந்த 22 வயது நபருடன் திருமணம் நடைபெற இருந்தது. இருதரப்பு பெற்றோரும் பேசி முடித்த நிலையில், 20 வயது பெண்மணி தனது காதலருடன் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மணப்பெண்ணின் தங்கையான 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க மணமகன் தரப்பு கட்டாயப்படுத்தி இருக்கிறது. இவர்களின் வற்புறுத்தலால் பெற்றோரும் வேறு வழியின்றி 13 வயது மகளுக்கு திருமணம் செய்ய சம்மதித்ததாக கூறப்படுகிறது.
பெண்மணி நான்கு நாட்களில் திரும்பிய நிலையில், மணமகன் தனக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என விடாப்பிடியாக இருந்துள்ளார். இந்த விஷயம் காவல்துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி 111 பேரின் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.