மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பெற்றோர் கண் முன்னே நடந்த கொடூரம்.." 15 வயது சிறுமி துப்பாக்கி முனையில் கூட்டு பலாத்காரம்..!!
மத்திய பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி துப்பாக்கி முனையில் பெற்றோர் கண் முன்னே கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் பன்வர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த திங்கள்கிழமை இரவு 15 வயது சிறுமி துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி கற்பழிக்கப்பட்டு இருக்கிறார் மேலும் அந்த சிறுமியின் பெற்றோரையும் குற்றவாளிகள் தாக்கியுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் பெற்றோரின் கண் முன்னே நடந்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி மற்றும் அவரது பெற்றோர் புதன்கிழமை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ஒரு நபரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கற்பழிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோர் ஒரு மாதத்திற்கு முன்பு தான் இந்த கிராமத்திற்கு குடிப்பெயர்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.