திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடைப்பயிற்சி சென்ற 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.!
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனையான 15 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தனது வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பிறகு அந்த சிறுமியிடம் 4 பேர் கொண்ட கும்பல் பேச்சுவார்த்தை கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் வைத்திருந்த போதை பொருளை சிறுமிக்கு வற்புறுத்தி கொடுத்துள்ளனர். போதைப் பொருளை உட்கொண்ட சிறுமி அடுத்த சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதன் பின்னர் அங்கிருந்து நான்கு பேரும் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அழுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.