#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நண்பனை பார்க்க சென்ற 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!
டெல்லியில் தனது நண்பரை பார்க்க சென்ற 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் தென்மேற்கில் உள்ள கபஷேராவை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில், நண்பர்கள் இருவர் இருந்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் மூவரும் சிறுமியுடன் கேலியாக பேசிக் கொண்டிருந்த நிலையில், சிறுமியை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் விரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து ண சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் குற்றவாளிகளான 3 சிறுவர்களையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.