#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
16 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு... 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் டியூசனுக்கு சென்று திரும்பிய பிளஸ் 1 மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 1 இளைஞன் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டியூசனுக்கு சென்ற மாணவி மாயம்
சென்னையில் உள்ள தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளி முடிந்து டியூசனுக்கு சென்று விட்டு 7:30 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். ஆனால் சம்பவம் நடந்த தினத்தன்று 8 மணி ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக டியூஷன் சென்டரில் கேட்டபோது மாணவிய ஏற்கனவே வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.
கூட்டு பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்ட மாணவி இந்நிலையில் இரவு 9 மணி அளவில் கிழிந்த ஆடைகள் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி வீடு திரும்பி இருக்கிறார். இதனைக் கண்டு உறைந்து போன பெற்றோர் என்ன நடந்தது.? என மாணவியிடம் கேட்டுள்ளனர். அப்போது டியூசனிலிருந்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்த தன்னை 3 நபர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர்: காதல் திருமணம் முடிந்த 10 நாட்களில், செயின் திருட்டு வழக்கில் கைதான இளைஞர்; ஆன்லைன் கடனை அடைக்க விபரீத செயல்.!
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல குழுவிற்கு தகவல் அனுப்பிய காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் விசாரணை செய்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை காவல்துறையிடம் தெரிவித்த சிறுமி தன்னை பலாத்காரம் செய்த நபர்கள் குறித்த விவரங்களையும் கூறி இருக்கிறார். இதன் அடிப்படையில் காவல்துறை சங்கர் என்ற 23 வயது இளைஞனையும் அவனுடன் சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது .
இதையும் படிங்க: குடும்பப்பிரச்சனையில் விபரீதம்; மகனை கிணற்றில் தூக்கி வீசி, தாய் தற்கொலை.!