மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே... பள்ளி வளாகத்தில் 16 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு... சக மாணவர்கள் 5 பேர் கைது.!
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அந்த மாணவியுடன் படிக்கும் 5 சக மாணவர்களை கைது செய்து இருக்கிறது.
உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் 16 வயது மாணவி பிளஸ் ஒன் படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அவருடன் படிக்கும் ஒரு மாணவருக்கும் இடையே விளையாட்டு வகுப்பில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவி, மாணவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து குறித்த மாணவியை பள்ளி வளாகத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை ஐந்து மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பள்ளி வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட்சிகள் அங்கிருந்து சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகி இருக்கின்றன. அதனை கைப்பற்றிய காவல் துறையினர் அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.