மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்டர்நெட் பழக்கத்தால் 16 வயது சிறுமி கர்ப்பம்.. யூடியூப் பார்த்து குழந்தை ஈன்று, கழுத்தை நெரித்து கொன்ற தாய்..!!
சோஷியல் மீடியாவில் பழக்கமானவரை காதலித்து, அவரை சந்திக்க சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த நிலையில், அவர் கர்ப்பிணியாகி குழந்தையை பெற்றெடுத்து பெல்டால் கழுத்தை நெரித்து கொன்ற சோகம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் எப்போதும் செல்போனும் கையுமாக இருந்து வந்த நிலையில், சமூகவலைதளம் மூலமாக பலரிடம் அறிமுகமாகி பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் தாய் அவரின் செல்போனை உடைத்து எரிந்துள்ளார். பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கப்பட்டபோது சிறுமி சோர்வுடன் இருந்துள்ளார். பல இடத்தில் இரத்த கரையும் இருந்துள்ளது.
இதில் சிறுமியிடம் சந்தேகம் அடைந்து விசாரிக்கையில், அவர் தனக்கு மாதவிடாய் என்று கூறியுள்ளார். நம்பாத தாயார் நடத்திய கண்டிப்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமி இன்ஸ்டாகிராமில் தனக்கு யார் என்றே தெரியாத தாக்கூர் என்ற இளைஞரிடம் பழகி வந்த நிலையில், சம்பவத்தன்று அவர் சிறுமியை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
இருவரும் சந்தித்த சமயத்தில், தாகூர் தனது நண்பரின் வீட்டிற்கு அவரை அழைத்து சென்று பலாத்காரம் செய்ததும் அம்பலமானது. இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில், வீட்டிற்கு தெரியாமல் அதனை மறைத்து தற்போது கர்ப்பிணி ஆகி வீட்டிலேயே YoutTbe பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.
குழந்தை பிறந்த பின்னர் அதன் அழுகுரல் சத்தம் வெளியே கேட்கும் என்று நினைத்த சிறுமி, குழந்தையின் கழுத்தை பெல்டால் நெரித்து கொலை செய்து உடலை மாடியில் உள்ள பையில் மறைத்து வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.