மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலை கைவிட்ட 17 வயது சிறுமி சுட்டுக்கொலை: நடுரோட்டில் காதலர் வெறிச்செயல்.! அதிர்ச்சி வீடியோ வைரல்.!!
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இவர் பள்ளி முடிந்ததும் டியூசனுக்கும் செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமிக்கு அப்பகுதியைச் சார்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டு பின் நாட்களில் அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை மாணவி கைவிட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் ஒரே ட்யூசனில் படித்து வருவதாகவும் தெரியவரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மாணவி பேசாததை ஏற்றுக்கொள்ள இயலாத மாணவர், அவரை பொதுவெளியில் வைத்தே தாக்கியிருக்கிறார். மேலும் நேற்று மாணவியை பின்தொடர்ந்து வந்த இளைஞர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.