மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்ப மானத்திற்காக சிறுமியை கொன்ற தாய்மாமன் மகன்..அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி தன் வீட்டில் இருந்தால் கிராமத்தினர் அவதூறாக பேசுவதாக கூறி அவரது தாய் மாமனே விஷம் கொடுத்து கொலை செய்த கொடூர சம்பவம் காவல்துறையினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பிரபல ஆங்கில பத்திரிக்கையான ஹிந்துஸ்தான் டைம்சில் வெளியிட்ட செய்தியின் படி இந்த மாத தொடக்கத்தில் அதே கிராமத்தில் வசிக்கும் நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி, அவரது தாய் மாமன் மற்றும் அவரது மகன் மற்றும் உறவினர்களால் கட்டாயப் படுத்தி, விஷம் கொடுத்து கெல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் தாய் மாமா மற்றும் 22 வயதுடைய மகன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மே 21 கைது செய்யப்பட்டதாக காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மே 18 அன்று பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிக்கி தப்பித்த சிறுமி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துவிட்டதாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவர் தாய் மாமா காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
மே 20அன்று அவரது மகனிடம் விசாரணை நடத்தியபோது சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையின் போது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தன் வீட்டில் இருந்ததால் கிராமத்தில் உள்ளவர்கள் தனது குடும்பத்தை அவதூறாக பேசினார்கள் அதனால் அந்தச் சிறுமியை கொன்றதாக, காவல்துறையினரிடம் கைது செய்யப்பட்ட அந்த சிறுமியின் தாய் மாமனுடைய மகன் கூறியுள்ளார்.
மேலும் காவல்துறையினர் விசாரணையில் கொலையாளிகள் சிறுமிக்கு விஷம் கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து கொலை செய்துவிட்டு பின்னர் அதை தற்கொலை வழக்காக மாற்ற அவரது ஆடைகளை மாற்றி வீட்டில் படுக்க வைத்துள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. மேலும் கொலையில் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், சம்மந்தம் உள்ளதா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.