35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தும்மல் வந்த அடுத்த நொடியே பரிதாபமாக பறிபோன 18 வயது இளைஞனின் உயிர்... வைரலாகும் சிசிடிவி காட்சி!!
உத்திரப் பிரதேச மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு தும்மல் வந்த அடுத்த நொடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் கித்வாய்நகர் காலி பகுதியைச் சேர்ந்தவர் ஜுபைர்(18). இவர் தனது நண்பர்களுடன் இரவில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஜுபைர்க்கு தும்மல் வந்துள்ளது.
தும்மல் வந்த அடுத்த நொடியே ஜுபைர் சுருண்டு கீழே விழுந்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை எழுப்ப நண்பர்கள் முயற்சித்தனர். ஆனால் ஜுபைர் எழுந்திருக்காததால் பதறிப்போன நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு ஜுபைரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜுபைர் சரிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
जिंदगी न कोई ठिकाना.........रास्ते चलते अचानक छींक आई, लड़के ने अपना गला पकड़ा और उसकी मौत हो गई. pic.twitter.com/PVtWXfZxKH
— Shubham shukla (@ShubhamShuklaMP) December 4, 2022