திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்.! ஏர்போட்டில் வசமாக சிக்கிய 19 வயது இளம்பெண்!!
கேரளா, காசர்கோட் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா. 19 வயது நிறைந்த இவர் துபாயிலிருந்து கரிப்பூர் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அப்பொழுது விமானத்தில் இருந்து இறங்கி வந்த அனைவரையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது ஷகிலாவை சோதனை செய்தபோது அவரிடம் தங்கம் இருப்பதற்கான எச்சரிக்கை ஒலி அடித்துள்ளது. இந்நிலையில் அவரை விசாரணை செய்தபோது அவர் தன்னிடம் எதுவுமே இல்லை என நீண்ட நேரமாக மறுத்துள்ளார். ஆனாலும் அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டதில், அவரது உள்ளாடைக்குள் 1884 கிராம் தங்கம் 3 பிளாஸ்டிக் பைக்குள் வைத்து தைத்து கடத்தி வரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
சோதனைக்கு பிறகு பெண்ணால் கடத்தி வரப்பட்ட தங்கம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கம் 1.9கிலோ என்றும் அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.