வேலைக்கு சேர்ந்த ஒரே நாளில் கைவரிசை காட்டிய இளைஞர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!



19 years old boy killed and robbery in Mumbai

மும்பையில் இளைஞர் ஒருவர் நகைக்கடை உரிமையாளரின் மனைவியை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள முகேஷ் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டில் 19 வயதான கண்ணயா குமார் என்ற இளைஞரை சமீபத்தில் வேலைக்கு சேர்த்துள்ளார். இவருடைய தந்தை பக்கத்து வீட்டில் வாட்ச்மேனாக வேலை செய்வதால், இவரை வேலைக்கு எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Mumbai

இந்த நிலையில் வேலைக்கு சேர்ந்த கண்ணயா குமார் அடுத்த நாளே ஜோதியை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை திருகிக்கொண்டு தப்பி சென்றுள்ளார். இவைகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து போலீசார் குற்றவாளியின் செல்போன் எண்ணை கண்காணித்து வந்த நிலையில், அவர் பீகார் செல்லும் ரயிலில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

Mumbai

இதனையடுத்து தற்போது குற்றவாளி மும்பை அழைத்துவரப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு சேர்ந்த அடுத்த நாளே இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.