கொரோனா 2 வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் அடுத்தடுத்து மரணம்!! பீதியில் மக்கள்..



2 dead in Japan after taking Madarna corona vaccine

மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி  போடும் பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இந்நிலையில் ஜப்பானில் மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் அடுத்தது உயிரிழந்தார். இதனால் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை, உயிரிழந்த இருவருக்கும் செலுத்திய மாடர்னா தடுப்பூசியில்உலோகத் துகள்கள் இருந்ததாக கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை, "மாடர்னா தடுப்பூசி 2 வது டோஸ் எடுத்துக்கொண்ட 30 வயதுடைய இருவர் தடுப்பூசி செலுத்தின்கொண்ட சில நாட்களில் உயிரிழந்தனர்.

corona

இதனை அடுத்து தடுப்பூசி உற்பத்தி செய்த மூன்று இடங்களுக்கும் தடுப்பூசி உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்த மூன்று இடங்களில் இருந்து வந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள்தான் உயிரிழந்தார். இதனை அடுத்து நடந்த விசாரணையில் தடுப்பூசி நிரப்பப்பட்ட வயலில் உலோகத் துகள்கள் இருந்ததாகவும், அதுதான் அவர்களின் மரணத்திற்கு காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளது.

மேலும், அந்த மூன்று இடங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சுமார் 1.63 மில்லியன் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தடுப்பூசியின் செயல்திறன் அல்லது பாதுகாப்பு குறித்து இந்த தடை விதிக்கப்படவில்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.