திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓடும் பேருந்தில் கேபினுக்குள் வைத்து இளம் பெண்ணை பலாத்காரம் செய்த 2 டிரைவர்கள்.. தர்ம அடி கொடுத்த சக பயணிகள்.!
உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் கான்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் லலித், முகமது ஆரிப் ஆகியோர் ஓட்டுனர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பேருந்தில் பயணிகளால் அனைத்து இருக்கைகளும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது பேருந்தில் நின்றபடி வந்த பயணிகளை ஓட்டுநர்கள் அழைத்து தங்களது கேபினில் அமர வைத்துக் கொண்டனர்.
இதனையடுத்து கான்பூரில் இருந்து ஜெய்ப்பூர் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அந்த பேருந்தில் இளம்பெண் ஒருவர் ஏறி டிரைவர் கேபினில் வந்து அமர்ந்தார். பின்னர் கேபினில் அமர்ந்திருந்த ஒவ்வொரு பயணிகளும் தங்களின் இடம் வந்தவுடன் இறங்கி சென்று உள்ளனர்.
இந்நிலையில் அந்த பேருந்து கேபினில் 2 டிரைவர்களும் அந்த இளம் பெண் மட்டுமே இருந்துள்ளனர். இந்த சூழலில் ஓடும் பேருந்தில் அந்த இரண்டு டிரைவர்களும் அந்த இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் கேபினில் இருந்து உள்ளே இருக்கைக்கு செல்லும் கதவானது பூட்டப்பட்டிருந்தது. இதனால் கேபினில் நடக்கும் சம்பவம் உள்ளே அமர்ந்திருந்த பயணிகளுக்கு தெரியவில்லை.
இந்த நிலையில் கேபினில் இருந்து பெண் ஒருவர் அலரும் சத்தம் கேட்டு சக பயணிகள் கேபின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அவர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து சக பயணிகள் அந்த 2 டிரைவர்களையும் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கிடையில் டிரைவர் லலித் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இந்நிலையில் டிரைவர் முகமது ஆரிப்பை சிறைப்பிடித்த பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி சென்ற டிரைவர் லலித்தை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் டிரைவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.