திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பயணத்தின் போது அலட்சியம்.. ஓடும் இரயிலில் ஏற முயற்சி.. பெண்ணின் உயிரை காப்பாற்றிய இரயில்வே காவலர்.!
ஓடும் இரயிலில் ஏறுவது இறங்குவது உயிரை பறிக்கும் ஆபத்து கொண்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ரயில் நிலையத்திலிருந்து தனது இலக்கை நோக்கி புறப்பட்ட ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் இருந்து அவசரமாக வந்த பெண்கள் ரயிலில் ஏற முயற்சித்த நிலையில், ஒருவர் நிலை தடுமாறி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே விழ சென்றுள்ளார்.
அப்போது சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி அரவிந்த் குமார் என்பவர் துரிதமாக செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றினார். அந்த வீரருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ பயணிகள் முயற்சிக்க வேண்டாம்.
தங்களது பயணத்திற்கு திட்டமிடும்போது விரைவான நேரத்திற்கு வந்து முன்னதாகவே ரயில் நிலையங்களில் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.