திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீண்டும் வெடித்த கலவரம்..!! துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பதறும் மணிப்பூர்..!!
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்த கலவரத்தால் 2 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் வாழ்ந்துவரும் மெய்டீஸ் என்கிற பழங்குடியினர் அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்த்து வழங்குமாறு அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின பழங்குடியினர் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த மே மாதம் 2 ஆம் தேதி நடந்த இந்த போராட்டத்தின் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. சவ்ரசந்திரபூர் மாவட்டத்தில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும் கார்கள், இருசக்கர வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
இந்த வன்முறை சிறிது, சிறிதாக அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. இதனை தொடர்ந்து, பரவிவரும் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது. அங்கு படிப்படியக அமைதி திரும்பிய நிலையில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மணிப்பூர் மாநிலம் சவ்ரசந்திரபூர் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வன்முறை நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.