மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமான விபத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை! தாயிடம் சொல்லாமல் மறைக்கும் தந்தை! வெளியான கண்கலங்கவைக்கும் துயரம்!
கேரளா கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கோர விபத்தில் விமானி உள்பட 18பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் முர்டாஷா பைசல் என்பவர் தனது 2 வயது மகளை இழந்து தவித்து நிற்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் தனியார் நிறுவனமொன்றில் டீம் லீடராக முர்டாஷா பைசல் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுற்றுலா விசா மூலம் மார்ச் 1ஆம் தேதி அவரது மனைவி சுமையா தஸ்னீம் மற்றும் 2 வயது மகள் ஆயிஷா துவா இருவரும் துபாய் சென்றுள்ளனர். பின்னர் கொரோனா பிரச்சினையால் அங்கேயே இருந்த அவர்கள் இருவரும் இந்திய அரசின் திட்டத்தின்படி நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு, புறப்பட்டனர்.
மேலும் முர்டாஷா பைசலும் அதனைத் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு வரும் விமானத்தில் நாடு திரும்ப புக் செய்திருந்தார். இந்நிலையில் சுமையா மற்றும் குழந்தை வந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 2 வயது குழந்தை ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சுமையா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் நாடு திரும்பிய முர்டாஷா பைசல் மகள் உயிரிழந்த செய்தி கேட்டு கதறி துடித்துள்ளார்.
மேலும் குழந்தை இறந்தசெய்தி குறித்து இன்னும் தாய் சுமைய்யாவிடம் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவர் பூரண குணமடைய வேண்டும். அதன் பிறகுதான் சொல்லவேண்டுமென முர்டாஷா பைசல் கூறியுள்ளார். மேலும் குழந்தை குறித்து கேட்ட தாயிடம் அவர் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் முர்டாஷா பைசல் விமான நிலையத்தில் இறுதியாக தனது மகளுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.