#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தலைநகரில் பயங்கரம்... 20 வயது இளைஞர் கொடூர கொலை... கைது செய்யப்பட்ட 8 சிறுவர்கள்... பதற வைக்கும் வீடியோ காட்சி.!
இந்திய தலைநகரான டெல்லியின் தெற்கு பகுதியில் 20 வயது இளைஞர் சிறுவர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் எட்டு சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் சனிக்கிழமை மாலை 7:30 மணி அளவில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் தாக்குவதாக காவல்துறைக்கு அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த இளைஞர் சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்த தில்ஷாத் என தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டது எனவும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
20 years old man was stabbed to death by 8 attackers...
— srisathya (@sathyashrii) September 10, 2023
Another Normal day in Delhi..Delhi is getting worse in crimes and Kejriwal is sleeping..#Delhi #KejriwalKiGuarantee pic.twitter.com/imP9yFlf27
அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு சிறுவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.